அதிவேகமாக வந்த கார்.. ஆட்டோ, டிராக்டர், பைக்குகள் மீது மோதி கோர விபத்து.. 7 பேர் பலி.. பகீர் வீடியோ!

 
Odisha

ஒடிசாவில் அதிவேகமாக வந்த கார் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ, எதிரே வந்த டிராட்கர், பைக்குகள் மீது மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் புஜபூர் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 15 பேர் பயணித்தனர். அந்த சாலையின் மறுபுறம் 2 பைக்குகள், டிராக்டர் வந்து கொண்டிருந்தது.

Accident

அப்போது, அந்தசாலையில் அதிவேகமாக வந்த கார் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவை கடக்க முற்பட்டது. அப்போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீதும் எதிரே வந்த 2 பைக்குகள் மற்றும் டிராக்டர் மீதும் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 2 பைக்குகளில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதேபோல், ஆட்டோவும், காரும் கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிக்சிசைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


அதில், சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From around the web