பள்ளத்தாக்கில் கவிழவிருந்த பேருந்து.. 38 உயிர்களை காப்பாறிய ஒற்றை மரம்! பரபரப்பு வீடியோ

 
Kerala

கேரளாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு அருகே மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

accident

தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி பேருந்து மிகவும் ஆபத்தான நிலையில் நின்றது.

உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 


மலைப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பேருந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web