மணமகனின் வாயோடு வாய் வைத்த மணமகள்.. சிகரெட் புகை ஊதி போட்டோ ஷூட்! வைரல் வீடியோ

 
Wedding

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் ஷூட் இப்போது ஒவ்வொரு திருமணத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சில நேரங்களில், இது மிகவும் அசத்தலான இடங்களில் அல்லது கடற்கரையில் படம் பிடிக்கப்படுகின்றன. ஆற்றில் படகில் அமர்ந்து போட்டோ சூட்,  ஏன் தண்ணீருக்கு அடியில் கூட போட்டோ சூட் என இதற்காக திருமண ஜோடி லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வைரலாகி உள்ளது. போட்டோஷூட்டின் போது புதுமணத் தம்பதிகள் புகைப்பிடிக்க ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Wedding

மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடையில் உள்ளனர். மணமகன் புகைப்பிடித்து மணமகளின் வாயில் மணமகளின் வாயில் புகையை விடுகிறார். மணமகள் புகையை உள்ளிழுத்து வாயிலிருந்து புகையை வெளியேற்றுகிறார். பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டே கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை ராஜேஸ்வரி ஐயர் என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இது கலிகாலம். இந்த கலாச்சார சிதைவு பற்றி என்ன சொல்ல.. இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கும் மனைவி யாருக்குத் தேவை? கணவரின் உடல்நிலை மோசமடைவதை யார் பார்க்க விரும்புகிறார்கள்? என்று விமர்சித்தார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் ஆதாரம் தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோ மட்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததுடன், பரவலான சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அதை தாண்ட வேண்டாம் என நெட்டிசன்கள் நவ்ஜோதியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

From around the web