முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்.. அதிர்ந்த போன கணவர்..!

 
Wedding

தெலங்கானாவில் திருமணமான மறுநாளே மணப்பெண் பெண் குழந்தைப் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தவறான உறவால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல சம்பளத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்தனர். பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதே என கேட்டனர். அப்போது சமீபத்தில் பெண்ணுக்கு கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் தான் அவரது வயிறு வீங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் குறைந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறி சமாளித்தனர்.

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி டெல்லியில் வாலிபருக்கும் இளம்பண்ணுக்கும் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஐதராபாத் வந்துவிட்டனர். திருமணத்தன்று இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார்.

baby

தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார். உள்ளே வந்ததும் மனைவியை அன்போடு மாப்பிள்ளை வரவேற்றார். அப்போது கட்டிலில் அமர்ந்த மணப்பெண் திடீரென வயிறு வலியால் துடித்தார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறி அலறி கூச்சலிட்டார்.

இதனால் பதறிப்போன மாப்பிள்ளை உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். காரில் இளம்பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு ஆத்திரமும் ஏற்பட்டது.

இதற்கிடையே இளம்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர் இது குறித்து உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து உடனடியாக நொய்டா சென்றனர்.

Police

மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டோம். நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாப்பிள்ளையிடம் கெஞ்சினர். ஆனால் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்தனர். 

இதையடுத்து, இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் மணமகனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web