நடனமாடிய கலைஞர் திடீரென சுருண்டு விழுந்து துடி துடித்து பலி..! நெஞ்சை உலுக்கும் காட்சி!!

 
Karnataka

கர்நாடகாவில் பூத கோலா நடனம் ஆடி கொண்டிருந்த போதே கலைஞர் கந்து அஜிலா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, அதுவரை ஆரோக்கியமாக இருந்தவர்கள் திடீரென சரிந்து, உயிரிழப்பது படிப்படியாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நடனக் கலைஞர் ஒருவர் கோவில் அருகே நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் இழந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. 

dead-body

கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை ‘பூத கோலா’. அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வார்கள். இந்த கலைஞர்கள் தெய்வ நார்தகஸ் (Daiva Narthakas) என்று அழைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் பூத கோல நடனத்தின்போது, கந்து அஜிலா (60) திடீரென மயக்கமடைந்தார். அவரை பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்துவிட்டார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


அஜிலா கடபா பகுதியைச் சேர்ந்தவர். இவர் மிகவும் தேர்ந்த கலைஞர் என்று அழைக்கப்படுகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

From around the web