‘நான் சூப்பர் ஹீரோ வருகிறேன்’  கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்த 3-ம் வகுப்பு மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!

 
Kanpur

உத்தர பிரதேசத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதே மாநிலம் கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் ஆனந்த் பாஜ்பா. இவரது மகன் விராட் (8). இவர் வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். பாலிவுட் படமான ‘க்ரிஷ்’ படத்தின் சூப்பர் ஹீரோவை தனக்கு பிடித்திருப்பதாக தனது தாயிடம் விராட் கூறினார். இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹிருத்திக் ரோஷன், சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

jump

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (ஜூலை 19), குடிநீர் குடிப்பதற்காக தனது வகுப்பறையில் இருந்து 4 மாணவர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுவன் தனது நண்பர்களையும் குதிக்க ஊக்குவித்தார். ஆனால் அவர்கள் குதிக்க முன்வரவில்லை.

அப்போது விராட் திடீரென ‘நான் சூப்பர் ஹீரோ வருகிறேன்’ என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web