ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்... ராணுவ வாகனத்தில் திடீர் தீ விபத்து.. 5 வீரர்கள் பலி!

 
JK

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

JK

படா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மின்னல் தாக்கியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பூஞ்ச் ​​நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். இது தொடர்பாக ராணுவ வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவ்ம குறித்து ஜம்முவின் மக்கள் தொடர்பு அதிகாரி (பாதுகாப்பு) கூறுகையில், “இன்று, சுமார் 3.00 மணி அளவில், இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று, பிம்பர் காலியில் இருந்து பூஞ்ச் ​​மாவட்டத்தில் இருந்து சங்கியோட்டிற்குச் செல்லும் போது தீப்பிடித்தது” என்று கூறினார்.

From around the web