டெல்லியில் உள்ள பல்லுயிர் பூங்காவில் பயங்கர தீ விபத்து... அதிர்ச்சி வீடியோ!

 
Delhi

டெல்லி வஜிராபாத்தில் உள்ள பல்லுயிர் பூங்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

வடக்கு டெல்லியின் வசிராபாத்தின் ஜகத்பூர் பகுதியில் நேற்று (ஏப்ரல் 18) மாலையில் பல்லுயிர் பூங்காவின் பெரும்பகுதியில் எரியும் தீப்பிழம்புகள் தூரத்தில் இருந்து மக்களுக்கு தெரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பூங்கா டெல்லியின் மிகப்பெரிய பல்லுயிர் பூங்காவாகும். இந்த பூங்கா வசிராபாத் முதல் ஜகத்பூர் மற்றும் புராரி வரை நீண்டுள்ளது. 

Delhi

பூங்காவின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து, பார்த்தவுடனேயே பூங்காவின் பெரும்பகுதி எரிந்தது. ஏனெனில் வெயிலின் காரணமாக புதர்கள் காய்ந்து, புற்களும் காய்ந்து கொண்டிருந்தன. இதனால் தீ வேகமாக பரவி ராட்சத வடிவம் பெற்றது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். தீயை அணைக்க தீயணைப்பு படையினர் சுமார் 3 முதல் 4 மணி நேரம் போராடினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி கவுன்சிலர் ககன் சவுத்ரியும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பூங்காவில் தீப்பெட்டி அல்லது பீடியை சிலர் வீசியதால் தீ பரவியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பூங்காவிற்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

From around the web