டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. 3 பேர் பலி!
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. உள்ளே சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport.
— ANI (@ANI) June 28, 2024
(Video source - Delhi Fire Service) pic.twitter.com/Uc0qTNnMKe
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் டெர்மினல் 1-ல் இருந்து விமானப் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.