செல்போன் திருடியதாக இளைஞர் அடித்துக் கொலை.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

 
Assam

அசாமில் செல்போன் திருடியதாக இளைஞரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் புகான் கிராமம் சலேகானில் உள்ள ஒரு வீட்டில் நேற்று செல்போன் திருடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்போனை திருடியதாக பாலு கோலா, தாது கோயாலா ஆகிய இரண்டு இளைஞர்களையும் கிராம மக்கள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

Assam

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பாலு கோலா (27) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாது கோயாலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த பாலு கோலா, புகான் நகர் 10வது வார்டில் வசித்து வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சலேகானில் உள்ள ஜெம்ராமின் வீட்டில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிய வந்தது. இந்த தாக்குதலில் பால்கி, மைனா கர்மாகர், டிக்கு கோயாலா, ஜெய்ராம், புய் மண்டல், ராஜு மாஜி, கமல் மற்றும் கரண் ஆகியோர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருவதால் சிவசாகர் மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

From around the web