3வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி.. ரீல்ஸ் எடுக்கும்போது நிகழந்த சோகம்.. அதிர்ச்சி வீடியோ

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் எடுக்கும் போது 3வது மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ஸ்டண்டுகள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

dead-body

அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.


மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

From around the web