தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்.. செல்பி மோகத்தினால் நடந்த விபரீதம்!

 
Telangana

தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது கல்வாயில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜூனா சாகர் அணையின் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.

Telangana

அந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அதனை கண்டு ரசித்தனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே செல்பி எடுக்க முயன்றார்.

அப்போது குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்த அவர், செல்பி எடுக்க முயன்றபோது திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் கால்வாயில் விழுந்த பெண்ணை கயிற்றால் கட்டி சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.


தண்ணீரில் விழுந்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

From around the web