இஸ்லாமிய மாணவரை தாக்க இந்து மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியை... அதிர்ச்சி வீடியோ!

 
UP

உத்தர பிரதேசத்தில் பள்ளியில் இஸ்லாமிய மாணவரை அடிக்க சொன்ன ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்கின்றார்.

UP

அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இஸ்லாமிய மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். ‘Jitne bhi Muslim bachche hai…’ என்று ஆசிரியை கூறுகிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார்.

அதன் பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. இஸ்லாமிய மாணவரை அடிக்குச் சொல்லும் ஆசிரியர் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றது.


காவல் நிலையத்திற்கு இந்த விவகாரம் சென்றுவிட்ட நிலையில், ஆசிரியை போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆசிரியைக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அந்த பள்ளிக்கு இதற்கு மேல் அனுப்பப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

From around the web