தமிழில் பதவியேற்ற தமிழ்நாடு எம்பிக்கள்.. பரபரப்பான நாடாளுமன்றம்!

 
Tamilnadu

கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு மக்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

18-வது நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடியை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களும், எம்பிக்களும் பதவி ஏற்றனர். 2-வது நாளாக இன்று மக்களவை கூடியதும் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 எம்பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக் கொண்டனர். கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழ்நாடு எம்பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.  

Tamilnadu

தமிழ்நாடு எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டபோது கருணாநிதி, ஸ்டாலின், உயதநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர். கதிர் ஆனந்த், சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட எம்பிக்கள்  பதவியேற்றபோது வருங்காலம் எங்கள் உதயநிதி...வாழ்க தமிழ்நாடு, ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர். பதவியேற்றதும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்பி முழக்கமிட்டார்.

Tamilnadu

திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். “தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக" என அவர் கூறியதும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழில் பதவியேற்ற திருமாவளவன், ஜனநாயகம் வாழ்க, அரசியல் சாசனம் வாழ்க என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். 

From around the web