தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் எரித்துக் கொலை.. ஜார்கண்டில் அதிர்ச்சி சம்வபம்!

 
Jharkhand

ஜார்க்கண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் முதுநிலை 2-ம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன்குமார் உடல், கல்லூரி விடுதி அருகே உள்ள முட்புதரில் கிடந்தது. 

ranchi

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மதன்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் ஆயில் கீழே சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர்தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என்று போலீசார்  தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து பரியாது காவல் நிலையப் பொறுப்பாளர் ஹுஸ்னைன் அன்சாரி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்கொலை மற்றும் கொலை ஆகிய இரு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

From around the web