மனைவியின் நடத்தையில் சந்தேகம்... உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வைத்து பாதுகாத்த கணவன்!!

 
Chhattisgarh

சத்தீஸ்கரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியைக் கொன்று, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, தண்ணீர் தொட்டியில் கணவன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உஸ்லாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பவன் சிங் தாக்கூர். இவருக்கும் சதி சாஹு என்ற பெண்ணுடன் திருமணமாகி உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர் பவன் தாக்கூருக்கு மனைவி சதி சாஹுவின் நடத்தையின் மீது சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Chhattisgarh

இதன் காரணமாக இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் மனைவி மனைவி சதியை கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலையை மறைக்கும் விதமாக மனைவியின் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார். 

சம்பவம் நடந்து இரு மாதங்கள் கடந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ஆய்வு செய்தனர். 

arrest

அப்போது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web