டெல்லியில் திடீர் பதற்றம்.. தடுப்புகளை மீறி எகிறி குதித்த பாஜகவினர்.. தின்றும் போலீஸ்!!

விசாரணைக்கு உள்ளான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியது.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கெஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. அதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தலைமைச்செயலர் நரேஷ் குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வீட்டில் இருந்து கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
#WATCH | Delhi: BJP workers protest against Delhi CM and AAP national convener Arvind Kejriwal, over excise policy case. pic.twitter.com/oug3jsUCBm @PMOIndia #xenoh
— Aditya Lok Pathak (@Xenohadi) April 17, 2023
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக் கோரி டெல்லியில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லி சட்ட சபைக்கு வெளியே பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.