ஐதராபாத் - ஹவுரா விரைவு ரயிலில் திடீர் புகை.. பயணிகள் அச்சம்!

 
train

ஐதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. திடீரென ரயிலில் புகை ஏற்பட்ட காரணத்தினால் வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு கருதி ரயிலை நிறுத்தியுள்ளனர்.

Train

ரயில் நின்ற நிலையில் பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு கீழே இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தினால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதான வயலின் சக்கரத்தின் பகுதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.   
ரயிலானது சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் சக்கரத்தில் இருக்கும் பிரேக் அழுது பழுது ஏற்பட்டதால் புகை வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 9 பேர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

From around the web