கராத்தே மாஸ்டர் மிரட்டி பாலியல் பலாத்காரம்.. ஆற்றில் குதித்து ப்ளஸ்-1 மாணவி தற்கொலை!
கேரளாவில் கராத்தே பயிற்சியாளர் மிரட்டி பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த ப்ளஸ் 1 மாணவி ஆற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள ஊர்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் அலி (43). கராத்தே பயிற்சியாளரான இவர், தனது வீட்டில் கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கராத்தே பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இவரிடம் கராத்தே பயின்று வந்த அதே பகுதியை சேர்ந்த ப்ளஸ்-1 மாணவி நேற்று மாலை திடீரென மாயமானார். மாணவியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள ஆற்றில் மாணவியின் சடலம் மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கராத்தே பயிற்சியாளர் சித்திக் அலி பலமுறை பலாத்காரம் செய்ததால் தான் மகளின் மரணம் நடந்ததாக பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சித்திக் அலியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.