வலுக்கும் எதிர்ப்பு! பதவி விலகுவாரா அமித்ஷா?
நாடாளுமன்றத்தில் டாக்டர்.அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளன. நாடாளுமன்றத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அமித்ஷாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஜெய்பீம் முழக்கத்துடன் இந்த எம்.பி.க்களின் ஊர்வலம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
மேலும் தமிழ்நாடு முதல் வடக்கே காஷ்மீர் வரையிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அமித்ஷா உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் கருப்புதினம் என்று ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாஜகவினர் எதிர்பாராத திருப்பமாக அம்பேத்கர் விவகாரம் மாறியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.