அதிகாலையிலேயே பயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. மக்கள் அச்சம்!

 
Jammu

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earthquake

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 6.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலையில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் திடுக்கிட்டு விழித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நிலநடுக்கம் காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட நிலையில், அடுத்த 7 நிமிடங்களில் அதாவது 6.52 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் எற்படது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web