திருமணத்திற்கு முன்பே.. துணையுடன் பாலியல் உறவு.. 7 நாட்கள் வரை அனுமதி - வினோத கிராமம்...!

 
Chhattisgarh

சட்டீஸ்கரில் உள்ள கிராமத்தில் திருமணத்திற்கு முன்பே துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள், தனித்துவமான பண்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யாமலேயே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே அவர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் வியப்பாக உள்ளது.

Ghotul

கவுக்டல் என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள், இதை நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் மாதிரி என ஒப்பிடலாம். இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் முன்னோர்கள் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தபட்ட திருவிழா நாளில் திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்று கூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் பாலியல் உறவை வைத்துக்கொள்கின்றனர்.

sex

இரவு முழுவதும் ஒன்றாக கழிக்கும் இந்த வயது வந்த ஜோடிகள், தேவைப்பட்டால் அவர்களின் கூட்டாளர்களை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் கண்டிப்பாக ஒரு ஜோடியை இவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை இவர்கள் வழங்கி இணையை தேர்வு செய்கின்றனர். உள்ளம் கவர்ந்த துணையை சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவிக்கிறார். இவ்வாறு இவர்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கின்றனராம்.

From around the web