கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து.. 13 பக்தர்கள் பலி.. ராமநவமியின் போது கோர சம்பவம்!!

 
indore

மத்திய பிரதேசத்தில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து கீழே விழுந்தது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Indore

ராம நவமியை முன்னிட்டு இன்று அதிகப்படியான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்துள்ளதால், காங்கிரட் தளம் பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழுந்துள்ளது. மக்களை மீட்கும் பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தூர் பாஜக எம்பி ஷங்கர் லால்வானி கூறுகையில், “விபத்து நடந்த இடத்தில் நிர்வாகக் குழுக்கள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் எங்கள் நோக்கமாக உள்ளது. கோயில் மிகவும் பழமையான கோயில் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை விபத்துக்கு சொல்வது கடினம். மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார். 


சம்பவ இடத்துக்கு வந்த பேரிடர் மேலாண்மை நிபுணர் அஞ்சலி குவாத்ரா கூறுகையில், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதை அரசு ஆராய வேண்டும். மேலும், மீட்புப் பணியில் அர்சு விரைந்து செயல்பட்டு வருகிறது, நல்ல விஷயம்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பது பெரிய கேள்வி? முக்கிய நாட்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும் அதற்காக  ஏன் முன்கூட்டியே தயாராகக் கூடாது? விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான இடம் என்றும் கூறினார்.

From around the web