SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
#ISRO (Indian Space Research Organisation) launches the third and final developmental flight of SSLV-D3/EOS-08 mission, from the Satish Dhawan Space Centre in Sriharikota, congratulations 🎉
— Nirbhay singh (किसान चिंतक) स्वतंत्र पत्रकार (@nirbhaysirohi) August 16, 2024
@isro #SSLVD3 pic.twitter.com/dfzVqy5dSY
செயற்கைக்கோளை சுமந்து செல்லும் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.