செப்டம்பர் 18-ம் தேதி முதல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்.. ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

 
Parliament

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை கடுமையாக எதிரொலித்தது. இதனால் நாடாளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன. ஆகஸ்ட் 11-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது. அமளிக்கு மத்தியில் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

Parliament

மழைக்காலக் கூட்டத்தொடருக்குப் பின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். ஆனால், அதற்கு முன்பாக செப்டம்பர் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்தியில், “நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும். அமிர்த காலத்தின் மத்தியில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்துவதற்கு காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


ஐந்து அமர்வுகள் இருக்கும் என்று கூறியிருந்தாலும், இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களில் குறித்து இந்தத் தகவலையும் அரசு தரப்பில் வெளியிடவில்லை.

From around the web