தெற்கு ரயில்வேயில் 2,438 காலி பணியிடங்கள்.. நாளை கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க! 

 
RRC

தெற்கு ரயில்வே அப்ரென்டிஸ் பணியில் உள்ள  2,438 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் உள்ள அப்ரென்டிஸ் பணியில் உள்ள 2,438 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடங்கள்

கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337 மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379, சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் - 722 என மொத்தம் 2,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Railway

கல்வி தகுதி: 

ஐடிஐ, பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். அதாவது ஃபிட்டர் பணியிடத்திற்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக டெக்னீஷியன் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியில் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து, அதில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 

15 வயதுக்கு மேற்பட்டவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பிர்ஷர்ஸ் என்றால் அதிபட்ச வயது வரம்பு 22 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

பயிற்சி காலம்: 
பிட்டர் பணி:
2 ஆண்டுகள் பயிற்சி 
வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்): ஒரு ஆண்டு 3 மாதங்கள் 
மெடிக்கல் லேப் டெக்னிஷயன்ஸ்: ஒரு ஆண்டு 3 மாதங்கள் 
முன்னாள் ஐடிஐ கேட்டகிரி / டெக்னிகல் தகுதி பெற்றிருந்தால் பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

jobs

தேர்வு முறை: 

மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆட்சேர்ப்பு தொடர்புடைய இணைப்பை கிளிக் செய்யவும். மேலும் அதில் கேட்டுள்ள விவரங்களை அனைத்தையும் பதிவு செய்யவும். அதன் பிறகு உங்கள் புகைப்படம் மற்றும் கட்டைவிரலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி நாள் ஆகும்.

From around the web