சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!! மருத்துவமனை கொடுத்த அப்டேட்

 
Sonia

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர் 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக இருந்தார். இதையடுத்து மகன் ராகுல் காந்தி கடந்த 2017-ல் காங்கிரஸ் தலைவரானார். ஆனால் 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி செயல்பட்டு வந்தார்.

சமீபகாலமாக சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சோனியா காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 

Sonia-Rahul

இதையடுத்து டெல்லியில் நடக்கும் கட்சியின் முக்கிய ஆலோசனைகளில் மட்டும் சோனியா காந்தி பங்கேற்று வருகிறார். பிற மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்வது, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை சோனியா காந்தி ஓரம்கட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Sonia

இதற்கிடையே தான் இன்று மருத்துவமனை சார்பில் சோனியா காந்தியின் உடல் நலம் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனை மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web