தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

 
Kerala

கேரளாவில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா அருகே வெளியேத்து பகுதியை சேர்ந்தவர் ஷைலஜா (52). இவரது மகன் ஆதில் (27). மனநோயால் பாதிக்கப்பட்ட இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே ஆதில் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 

murder

இந்த நிலையில் நேற்று காலை ஷைலஜா தனது மகனை சாப்பிட வருமாறு அழைத்து உள்ளார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஆதில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஷைலஜாவை மீட்டு மாளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஷைலஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

Police

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மனநலம் பாதித்த மகன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் ஆதிலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web