வளர்ப்பு தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மகன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

 
Andhra

ஆந்திராவில் சொத்துக்காக தாயை இரும்பு கம்பியால் மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபாய். இவர், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக் என்பவரை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்து இருக்கிறார். 

Murder

இதனிடையே லட்சுமிபாய்க்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்து  இருக்கிறார். இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லட்சுமி பாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். 

arrest

அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web