பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஓடிப்போன மகன்.. 55 வயது தாயை அரைநிர்வாண ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரர்கள்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி!

 
Punjab

பஞ்சாபில் பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு இளைஞரின் தாயை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டம் வால்டோஹா கிராமத்தில் 55 வயது பெண் ஒருவரின் மகன் பக்கத்துவீட்டு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பெண் வீட்டார் விருப்பத்துக்கு எதிராக அந்த இளைஞர் காதலியுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்.


இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சில நபர்கள் இளைஞரின் தாயை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை அரை நிர்வாணப்படுத்தி, கிராமத்துக்கு அழைத்து வந்து மானக்கேடு செய்துள்ளனர். அதிர்ச்சியளிக்கும் இதனை சிலர் வீடியோவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கும் நிகழக் கூடாது என நாடு முழுவதும் ஒன்றிய, மாநில அரசுகள் கடும் குற்ற வழக்குகளில் இதுபோன்ற குற்ற வழக்குகளில் கடுமை காட்டி வருகின்றன. 

Punjab

இந்நிலையில் பஞ்சாப்பில் மீண்டும் ஒரு மணிப்பூர் சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தர்ன் தரன் மாவட்ட போலீசார் 5 பேர் மீது கடந்த 3-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் குல்விந்தர் கவுர் மணி, சரண்ஜித் சிங் ஷானி, குர்சரண் சிங் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web