தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மென்பொறியாளர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

 
Telangana

தெலுங்கனாவில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மென்பொருள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆஞ்சநேயா நகரில் ஷன்முக் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான ஆண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தங்கி உள்ளனர். இங்கு ஐதராபாத்தில் மென்பொருளாக பணியாற்றி வந்த ஷேக் அக்மல் (24) என்ற வாலிபர் தங்கி இருந்து வந்தார். கடந்த 21-ம் தேதி அவர் விடுதி அறையில் இருந்து வெளியே சென்றிருந்தார்.

Dead Body

பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு வந்த போது, வாசலிலேயே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனிக்காமல் கேட்டைத் திறந்து வந்த ஷேக் அக்மல், எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் தொட்டிக்குள் விழும் போது அவரது தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால், மயக்க நிலையில் இருந்த ஷேக் அக்மல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதையடுத்து தங்கும் விடுதியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கச்சிபோலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web