6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பரிதாப பலி.. குஜராத்தில் சோகம்!

 
Surat

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சச்சின் பாலி கிராமத்தில் 6 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 30 வீடுகள் உள்ளன. இதில் 5 வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2016-17 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை (ஜூலை 6) மதிய வேளையில் அடுக்குமாடி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் 6 முதல் 7 பேர் வரை சிக்கிக் கொண்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Surat

சச்சின் பாலி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததால் தண்ணீரில் வீட்டின் வலுவிழந்து இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பாடுக்கான காரணாம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து பேசிய சூரத் காவல் ஆணையர் அனுபம் கெலாட், கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மாநில் பேரிடர் குழுவுடன், தேசிய பேரிடர் படையும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இடிபாடுகளில் 6 முதல் 7 பேர் சிக்கிக் கொண்டிக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.


அடுக்குமாடி குடியிருப்பில் ஏறத்தாழ 30 வீடுகள் உள்ள நிலையில் அதில் 4 முதல் 5 வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடியிருப்பதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குடியிருப்பில் தங்கி இருந்த அனைவரும் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுவரை பெண் உள்பட 4 இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு இருந்தவர்கள் மீட்கப்பட்டுளள்தாகவும் மீதமுள்ளவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

From around the web