சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி உயிரை விட்ட தங்கை.. தெலுங்கானாவில் சோகம்

 
Telangana

தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.

Raksha-Bandhan

இதனால மனஉளைச்சலுக்கு உள்ளான அப்பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயிரிழந்தார். தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது 2 தம்பிகளுக்கு அப்பெண் ராக்கி கயிறு கட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web