அதிர்ச்சி வீடியோ... பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து... வெடித்து சிதறிய பட்டாசுகள்..!

 
mysuru

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஹூப்ளி தொழில் பூங்கா பகுதி உள்ளது. இந்த தொழில் பூங்காவில் தனியார் பட்டாசு குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று பிற்பகல் இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. 

Mysuru

குடோனில் இருந்த பட்டாசுகள் முற்றிலுமாக வெடித்து சிதறியதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புகை பரவியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது வரை குடோனில் எத்தனை பேர் வேலை செய்துக் கொண்டிருந்தனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தகவல் அறிந்து 16 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


முதற்கட்ட விசாரணையில், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேவையான பட்டாசுகள் குடோனில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web