அதிர்ச்சி வீடியோ.. 11 வயது மகனை அடித்து உதைத்த தாய்.. சமூகவலைதளத்தில் வெளியிட்ட தந்தை!

 
Haryana

அரியானாவில் தனது 11 வயது மகனை அவரது தாய் அன்றாடம் அடித்து சித்ரவதை செய்த வீடியோவை பார்த்து அதிர்ந்த் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரியாணா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கியுள்ளார். அன்றாடம் தனது மகனை அடித்து உதைப்பதுடன், அவர் மீது ஏறி அமர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Haryana

மாலையில் வேலை முடிந்து வந்த அந்த இளம்பெண்ணின் கணவர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், தனது மனைவியே மகனை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதுடன் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிறுவனின் தந்தை, தனது மனைவியின் கொடூரமான நடத்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் தன் குழந்தையை அடிக்கும் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறுவனை உதைப்பதும், கையை முறிப்பதும் என காட்சிகள் அதில் இடம் பெற்றுளளன. இந்த தாக்குதலின் போது தந்தை தலையிட்டு அவரது மகனை தாயிடமிருந்து காப்பாற்றும் காட்சிகளும் இடம் பெற்றள்ளன.


குழந்தைகள் நலக் குழுவின் (CWC) உத்தரவின் பேரில் சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் சிறுவனைத் தாக்கிய தாய் மீது கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுவன் வாக்குமூலம் அளித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரஜ்குண்ட் காவல் நிலைய அதிகாரி ஷம்ஷேர் சிங் தெரிவித்துள்ளார்.

From around the web