அதிர்ச்சி வீடியோ.. காரின் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி..! கேரளாவில் பரபரப்பு

 
Kerala

கேரளாவில் தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பலாவின் சோங்கலில் உள்ள கொடங்கா வீதியை சேர்ந்தவர் நிசார். இவரது மனைவி தஸ்ரீபா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மஸ்துல் ஜிஷான் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

baby

அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார். அதனைப் பார்த்த 5 வயது சிறுவன் கார் நிறுத்த வசதியாக தனது சைக்கிளை ஓரமாக நிறுத்தினான். அப்போது, 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றுள்ளது. இதனை அறியாத முதியவர் காரை முன்னாள் எடுக்க முயற்சிக்க. குழந்தை காரின் முன் சக்கரத்தில் மாட்டி நசுங்கியது.

இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த 5 வயது சிறுவன் அலறியபடி ஓட, முதியவரும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். அங்கு குழந்தை மூச்சு, பேச்சற்று இருந்துள்ளது. உடனடியாக குழந்தையை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து மஞ்சேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web