அதிர்ச்சி வீடியோ..! 4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசிய காளை!!

 
UP

உத்தரபிரதேசத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தையை காளை முட்டி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெரு ஒன்றில் 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வேகமாக வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.

Bull

மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.


மேலும் அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில்  தெருவில் சுற்றித் திரிந்த காளையை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்றது.

From around the web