கல்லூரி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சிறுவன் உள்பட 2 பேர் கைது!

 
Karnataka

கர்நாடகாவில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மே 15-ம் தேதி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த பிரபுத்தா (21) என்ற மாணவி குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கை வெட்டப்பட்டிருந்தது. அத்துடன் குளியலறையில் கத்தியும் கிடந்தது. பிரபுத்தா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து பிரபுத்தா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தனது மகள் கொலை செய்யப்பட்டதாக, பிரபுத்தாவின் தாய் சௌமியா, போலீசில் புகார் செய்தார்.

கொலை நடந்த போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டிருந்தாலும், பின்பக்க கதவு திறந்திருந்ததாக சௌமியா புகாரில் கூறியிருந்தார். அத்துடன் பிரபுத்தாவின் செல்போன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது திருடப்பட்டது என்றும், தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்று சௌமியா உறுதிபட கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Murder

இந்த நிலையில், பிரபுத்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் பிரபுத்தா கழுத்து, கை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியபூர் போலீசார் விசாரணை நடத்திய போது, இக்கொலையில் ஒரு சிறுவன் உள்பட இருவர் ஈடுபட்டது தெரிய வந்தது. நண்பர்களான சிறுவனும், அவரது நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிறுவன் தாக்கியதில், அவரது நண்பரின் கண்ணாடி சேதமடைந்தது.

இதை பழுது நீக்க பணம் வேண்டும் என்பதற்காக, பிரபுத்தா வீட்டிற்குள் நுழைந்து சிறுவனும், அவரது நண்பரும் பணத்தை திருட முயன்றுள்ளனர். பேக்கில் இருந்து 2,000 ரூபாயை எடுத்த போது குளியலறையில் இருந்து பிரபுத்தா வந்துள்ளார். அதனால், தன்னை விட்டு விடும்படி பிரபுத்தாவின் காலைப் பிடித்து சிறுவன் கெஞ்சியுள்ளார்.

Police-arrest

அப்போது பிரபுத்தா தவறி கீழே விழுந்ததில் அவரது தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் எழுந்தால் உண்மையைச் சொல்லி விடுவார் என்பதால், பிரபுத்தாவை கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்ததாகவும், செல்போனை திருடிச் சென்றதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவன் உள்பட இருவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

From around the web