மும்பையில் அதிர்ச்சி சம்பவம்.. சூட்கேஸில் பெண்ணின் சடலம்..!

 
Mumbai

மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் சூட்கேஸில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகர் சிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைபெற்ற வருகிறது. இந்த இடத்தில் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

dead-body

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அதில், ஒரு இளம் பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பெண்ணின் சடலத்தைப் பார்க்கும்போது, ​​அவரது வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Mumbai Police

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளியைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web