அதிர்ச்சி.. 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... ஓட்டுநர் பலி!

 
MP

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் மத்திய பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டம் சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீதி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

MP

இதில் ரயில் தீ பிடித்து எரிய துவங்கியது. இதில் ரயில் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளார். ரயில்வே ஊழியர்கள் ஐந்து பேர் வரை காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான ரயில் ஓட்டுநர் பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. 


சரக்கு ரயில் ஒன்று எஞ்சின் தீப்பிடித்து எரிந்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்பூர் ரயில் நிலையம் முழுவதும் காலி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிலாஸ்பூர் காட்னி வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

From around the web