திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளைஞர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்! அதிர்ச்சி வீடியோ

 
UP

உத்தரபிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரஸ்வதி விஹாரில் ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின்படி, காஜியாபாத்தை சேர்ந்த சித்தார்த் என்ற நபர் ஜிம்மில் உடற் பயிற்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.

dead-body

திரெட்மில்லில் சித்தார்த் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நின்று மெதுவாக சுயநினைவை இழந்து திரெட்மில் அருகே சரிந்து விழுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிம்மில் உடல் பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஃபிட்னஸ் ஃப்ரீக்குகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web