அதிர்ச்சி!! பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி மிளகாய் பொடியில் பூச்சிக் கொல்லி மருந்து!

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ள மிளகாய்ப் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளா 4 டன் மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
FSSAI ன் உத்தரவைத் தொடர்ந்து தரம் உறுதிசெய்யப்படாத 200 கிராம் மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளை திறும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, பதஞ்சலி 200 கிராம் மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களிடம் திரும்ப ஒப்படைத்து முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பதஞ்சலி ப்ராண்ட் பொருட்கள் மீதான விளம்பரங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்திடம் ஏற்கனவே குட்டு வாங்கியுள்ளது பதஞ்சலி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.