நாயிடம் பாலியல் அத்துமீறல்.. 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர வாலிபர்! அதிர்ச்சி வீடியோ

 
UP

உத்தரப்பிரதேசத்தில் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், அதை 3வது மாடியில் இருந்து கீழே வீசிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயதான இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 3வது மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. 


அப்போது, பக்கத்து வீட்டார் வந்து பார்த்த போது இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் நாயை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டார் அபாய ஒலியை ஒலிக்க செய்ததும், நாயை 3வது மாடியில் இருந்து இளைஞர் கீழே வீசினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டார் படுகாயங்களுடன் இருந்த நாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இளைஞர் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவு) கீழ் ஒரு வழக்குப் பதிவும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 -ன் கீழ் ஒரு வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

Police-arrest

பின்பு, அந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இளைஞரை கைது செய்த போது அவர் மது போதையில் இருந்தார் என கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web