இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
Leave

புதுச்சேரியில் இன்றும் நாளையும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதலைப் பெற்றன. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் விடுதலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Puducherry

இந்நிலையில் இந்த ஆண்டும் மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் கொண்டாடப்பட இருக்கிறது. அதன்படி நாளை காலை புதுச்சேரி கடற்கரையில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 

முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

Cemetery Feast

அதேபோல கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகளில் பூக்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். எனவே இதற்கும் சேர்த்து இரண்டு நாட்களுக்கு புதுச்சேரியில் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

From around the web