கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
school-leave

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு, வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain

இந்நிலையில், நாளை (ஜனவரி 9) தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave

இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் தனியார், அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

From around the web