வரும் 26-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு 

 
Punjab Punjab
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பக்ரா, பாங்க் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக குர்தாஸ்பூர், ஹோஷியாபூர், கபூர்தலா, பெரோஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Punjab
மாநிலத்தின் தலைநகரான சண்டிகரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Bhagwant Mann
இந்த நிலையில் பஞ்சாப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 26-ம் தேதி (சனிக்கிழமை) வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

From around the web