ரூ. 70,000 கொடுத்து திருமணம்.. நடத்தையில் சந்தேகம்.. ஸ்வீட்டியை கொன்று உடலை காட்டில் வீசிய கணவர்!

 
Dead-body

டெல்லியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் ஃபதேபூர் பெரி பகுதியில் உள்ள ஜீல் குர்த் எல்லைக்கு அருகே காட்டில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கிய போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சனிக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கு அந்த சாலையில் ஆட்டோ ஒன்று சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ நம்பரை கைப்பற்றிய போலீசார், சத்தபூரை சேர்ந்த அதன் ஓட்டுநர் அருணை கைது செய்தனர்.

murder

அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட பெண், தனது மைத்துனரான ரம்வீரின் மனைவி ஸ்வீட்டி என அடையாளம் காட்டினார். தொடர் விசாரணையில் அருண், தரம்வீர் மற்றும் நாங்லோ பகுதியில் வசிக்கும் சத்யவான் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஸ்வீட்டியை அரியானா எல்லையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். தரம்வீருக்கு ஸ்வீட்டியின் நடத்தை பிடிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் அருண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை 70,000 ரூபாய் பணம் கொடுத்து தரம்வீர் மனைவியாக்கி உள்ளார். ஆனால் ஸ்வீட்டி அடிக்கடி சொல்லிக்காமல் வீட்டை விட்டு சென்று பல மாதங்கள் வெளியில் தங்கியுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட தரம்வீர் அவரை தனது உறவினர்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

Delhi

குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர், சத்யவான் மற்றும் அருண் ஆகிய 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோரிக்‌ஷாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web