மாதம் ரூ. 78,230 சம்பளம்.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..!

 
SBI வங்கி அறிவித்த சூப்பர் ஆஃபர் !!

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 42 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் வரும் Manager / Deputy Manager (Security) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியின் பெயர்: Manager / Deputy Manager (Security)

காலி பணியிடங்கள்: 42

jobs

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவற்றில் Assistant Superintendent, Deputy Superintendent, Assistant Commandant, Deputy Commandant of Indian Police ஆகிய பதவிகளில் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை சேவை செய்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.04.2023 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.48,170 முதல் ரூ.78,230 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

application

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD  - விண்ணப்ப கட்டணம் கிடையாது
General / EWS / OBC - ரூ.750

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.11.2023 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2023

From around the web