ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.. ஜனவரி 4-ம் தேதி முதல் பெறலாம்.. அரசு அறிவிப்பு!

 
Pongal

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வரும் ஜனவரி 4ம் தேதி வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து  சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Ration

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது.

puducherry

மேலும் புதுச்சேரி பிராந்தியத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்பு கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்கான உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web