மணிப்பூரில் கலவரம்... 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு... 60 பேர் பலி! முதல்வர் அறிவிப்பு

 
Manipur

மணிப்பூர் வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 60 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர்.

இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர். 

Manipur

அப்போது பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் ஏற்பட்ட மோதல் கலவர பூமியாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பிரேன் சிங், வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார். மேலும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார்.

Internet

பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டவர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நாள் முதல் தற்போது வரை நிலைமை பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதனிடையே, மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை மே 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

From around the web